நள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 12:20 pm
chandrababu-naidu-arrested-at-midnight

ஆந்திராவில், நிர்வாகத் தலைநகரமாக விசாகப்பட்டினத்தையும், சட்டமன்றத் தலைநகராக அமராவதியையும், நீதித்துறை சார்ந்த தலைநகரமாக கர்னூலையும் அமைக்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முன்மொழிந்தது. இதனையடுத்து தொடங்கிய  சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இரவில் சட்டசபை வளாக படிகட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆந்திராவில் 3 தலைநகரை உருவாக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட தினம், ஆந்திர மாநில வரலாற்றில் "கருப்பு நாள்" எனவும் சாடினார். இதனிடையே 3 தலைநகர் உருவாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close