16 வயது சிறுமியை ஊர் ஊராக கூட்டிச்சென்று சீரழித்த ஆட்டோ ஓட்டுநர்கள்.. 6 மாதமாக நடந்த கொடூரம்..!

  முத்து   | Last Modified : 13 Feb, 2020 10:19 am
16-year-old-girl-raped-10-persons-five-arrested

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் 16 வயது தலித் சிறுமி 10 ஆட்டோ ஓட்டுநர்களால் ஆறு மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமை படுத்தப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வெளியே ஒரு சிறுமி அழுவதை கண்ட சில உள்ளூர்வாசிகள்  அவரை விசாரித்த போது அவர் கூறியதை கேட்ட மக்கள் அதிர்ந்தனர். பின்னர் அந்த சிறுமியை  போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் தனக்கு நடந்த சோதனையை விவரித்தார்.

சில ஆட்டோ ஓட்டுநர்கள் நண்பர்கள் சிறுமியை கூட்டி சென்று பலாத்காரம் செய்த பிறகு, மேலும்  சில கூட்டாளிகளுடன் அனுப்பிவைத்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். ஆறு மாதங்களுக்கு மேலாக பலவந்தமாக ஆட்டோவிலேயே பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார் .

பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஐந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். சிறுமியின் தந்தை சிறு வயதிலேயே  இறந்துவிட்தால், அவர் தனது தாயுடன்  தங்கியிருந்தார். ஒருநாள் வீட்டின் அருகே விளையாடியப்போது திடீரென சிறுமி காணாமல் போனதாக அவரது தாயார் கூறுகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close