சோதனை செய்ய வேண்டும்.. மகனுடன் சென்ற பெண்ணுக்கு வேதனை அளித்த போலி போலீசார்..

  முத்து   | Last Modified : 13 Feb, 2020 09:25 am
three-men-duped-as-police-and-damaged-the-woman

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு எரித்துகொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் குற்றவாளிகளை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவங்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம் என்பது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சங்கரெட்டி மாவட்டத்தின் சுரயாபேட்டைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தனது 12 வயது மகனுடன் பிதருக்கு பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது பஸ் ஜஹீராபாத்தில் உள்ள பார்த்தாபூரை அடைந்ததும், போலீசார் உடையில் மூன்று பேர் பேருந்தில் ஏறி நேராக சோதனை செய்தனர். அப்போது, அந்த 37 வயது பெண் மற்றும் அவரது மகனை சோதனை செய்ய வேண்டும் என கிழே இறக்கினர். அதில் இரண்டு பேர் அவர்களின் பைகளை சோதனை செய்வது போன்று மகனை பிடித்து வைத்துக்கொண்டனர். அப்பெண்ணை மற்றொருவர் தனியாக இருந்த கட்டித்திற்கு அழைத்துச் சென்று அங்கு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் எனவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட பெண் ஜஹீராபாத் ஒன் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close