துபாய் வரை துரத்திச் சென்று மனைவியை கொன்ற கொடூரம்! சந்தேக புத்தியால் வந்த வினை!

  முத்து   | Last Modified : 15 Feb, 2020 01:29 pm
indian-man-accused-killing-wife-dubai-parking-lot-charged-premeditated-murder

குடும்ப சூழல் காரணமாக இந்தியர்கள் ஏராளமானோர் துபாய் நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் 40 வயதான இந்திய பெண் தனது கணவர், இரண்டு பெண் பிள்ளைகளை பிரிந்து துபாயில் பணிபுரிந்து வந்தார். 44 வயதான அவரது கணவர், மனைவியை பார்க்க சுற்றுலா விசாவில் அங்கு சென்றுள்ளார். அவர் தன் மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்றுள்ளார். அங்கு சென்றவர் மனைவியை பார்த்த நிலையில், அவருக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவை முற்றிய நிலையில், அப்பெண் பணிசெய்யும் நிறுவனத்தின் கார் பார்க்கிங் பகுதியில் வைத்து தன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கணவர் தப்பியுள்ளார். பின்னர் அவரது உடலை பார்த்த கார் ஓட்டுநர் அளித்த தகவல் அடிப்படையில் போலீஸ் வந்து பார்த்த பொழுது, அந்தப் பெண் வாகன நிறுத்துமிடத்தில் கார்களுக்கிடையில் இறந்த நிலையில் கிடந்திருக்கிறார்.

அப்பெண்ணின் அடிவயிற்றிலும் இடது தொடையிலும் ஆழமான கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. உடலிற்கு அருகே கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் கிடந்துள்ளது. பின்பு கொலை செய்த இந்திய நபர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இத்தம்பதியின் இரண்டு மகள்களும் இந்தியாவில் வசித்து வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close