கைக்குழந்தையுடன் மனைவி! ரயிலில் அமர இடம் கேட்டவர் அடித்தே கொலை!!

  முத்து   | Last Modified : 15 Feb, 2020 01:58 pm
man-beaten-death-argument-over-seat

பொதுவாகவே வடமாநிலங்களில் பெரும்பாலானோர் முறையாக ரயில் பயண டிக்கெட் எடுத்து பயணிப்பது இல்லை, முன்பதிவு பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டு அடாவடி செய்வர் என்ற புகார் உண்டு. இந்நிலையில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணுக்கு இடம் கேட்டதால், 7 பெண்கள் உள்பட 12 பேரால் கணவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மகராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. புனேவைச் சேர்ந்த சாகர் மார்காட் என்பவர் அவரது மனைவி ஜோதி, தாய் மற்றும் இரண்டு வயது மகள் ஆகியோருடன் புனே ரயில் நிலையத்தில், மும்பை-லாதூர்-பிதர் எக்ஸ்பிரஸில் பொது பெட்டியில் அதிகாலை 12.45 மணியளவில் ஏறியுள்ளார். கைக் குழந்தையோடு நின்று கொண்டிருந்த  தன் மனைவி உட்காருவதற்காக, இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை சற்று தள்ளி உட்காருமாறு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைய அப்பெண்ணுடன் வந்த ஆறு பெண்கள் உட்பட 12 பேர் சேர்ந்து மார்க்காட்டை தாக்கியுள்ளனர். மார்க்காட் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்றபோது, அவர்களையும் பிடித்து தள்ளியுள்ளனர். ரயில் டவுண்ட் ஸ்டேஷனை அடையும் வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரைத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை டவுண்ட் ரயில் நிலையத்தில் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரில் பெண்கள் உள்பட 12 பேரும் கைது செய்யப்பட்டனர். கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணுக்கு அமர இடம்கேட்ட கணவர் அடித்தே கொலை செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close