ஓர் பாலீர்ப்பு சட்டத்தை மறு சீராய்வு செய்கிறது உச்ச நீதிமன்றம்

  Anish Anto   | Last Modified : 08 Jan, 2018 03:07 pm


ஓர் பாலீர்ப்பு உறவை தடை செய்யும் சட்ட பிரிவு 377 தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுசீராய்வு செய்ய உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓர் பாலீர்ப்பு உறவை தடை செய்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய தண்டனை சட்ட பிரிவு 377-ன் படி ஓர் பாலீர்ப்பு உறவில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் 10 வ்ருடம் சிறை தண்டனை வழங்கப்படும். இந்த சட்டத்தை நீக்க கோரி நீண்ட காலமாக இந்தியாவில் உள்ள மாற்று பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்டோர் போராடி வருகின்றனர். 2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, ஓர் பாலீர்ப்பு உறவை மீண்டும் கிரிமினல் குற்றமாக அறிவித்தது. 

இதனை எதிர்த்து மாற்று பாலீர்ப்பு கொண்ட சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. சமீபத்தில் ஆதார் தனியுரிமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வர வழி வகை செய்தது. அதன்படி, இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர். தங்கள் விருப்பத்தின் காரணமாக மக்கள் அச்சத்தோடு வாழக்கூடாது. சமூக அறநெறி என்பது காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. சட்டம் வாழ்க்கையோடு இணைந்த ஒன்று. நேரத்திற்கு ஏற்ற வகையில் அது மாற வேண்டும். ஒரு மனிதனின் சுதந்திரம் மற்றும் உரிமையில் சட்டம் எல்லை கடந்து செயல்படக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை விரிவான அமர்வுக்கு மாற்ற போவதாக தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close