காந்தியை சுட்டது கோட்சே மட்டும் தான்; உச்சநீதிமன்றத்தில் அறிக்கை

  முத்துமாரி   | Last Modified : 08 Jan, 2018 03:56 pm


கோட்சேவை தவிர மகாத்மா காந்தியை வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை என வழக்கறிஞர் அமரேந்திர சரண் உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 

காந்தி கொலை செய்யப்பட்டு, 70 ஆண்டுகள் கடந்த நிலையில், காந்தியின் கொலை குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, மகாத்மா காந்தியின் மீது 4 குண்டுகள் பாய்ந்துள்ளன, 3 குண்டுகள் பாய்ந்ததாக மட்டுமே அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அந்த 4வது குண்டு எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அமரேந்தர் சரண் என்ற வழக்கறிஞரை உச்சநீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இதுகுறித்து ஆய்வு செய்து அமரேந்திர சரண் உச்சநீதிமன்றத்தில் இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில், கோட்சேவை தவிர மகாத்மா காந்தியை  வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை. கோட்சே சுட்டதனால் மட்டுமே காந்தி இறந்துள்ளார். இதனால் காந்தி கொலை தொடர்பாக மறுவிசாரணை எதுவும் நடத்த தேவையில்லை எனக்கூறி இது தொடர்பான பல ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close