திரையரங்கில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 09 Jan, 2018 02:26 pm


திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையில், உச்சநீதிமன்றம், திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என 2016ம் ஆண்டு உத்தரவிட்டது.  

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தது.

அதில், 'தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும். இது தொடர்பான விதிமுறைகளை வகுக்க ஒரு குழு ஏற்படுத்தப்படும், 6 மாத காலத்திற்குள் அமைச்சரவை குழு ஆய்வு செய்து ஒரு முடிவு எடுக்கும். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்' என மத்திய அரசு கூறியிருந்தது. 

இதனிடையே இன்றைய வழக்கின் விசாரணைக்கு பிறகு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஆனால் அதே நேரத்தில் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசு இது தொடர்பாக அமைக்கும் அமைச்சரவை குழுவுக்கும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இதன் மூலமாக உச்சநீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மாற்றியமைத்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close