காவேரி பிரச்சனைக்கு 4 வாரங்களில் தீர்ப்பு - உச்ச நீதி மன்றம்

  Sujatha   | Last Modified : 10 Jan, 2018 06:04 am


தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களிடையே கடந்த 20 வருடங்களாக நிலவி வரும் காவிரி நீர் தொடர்பான பிரச்னைக்கு  தீர்ப்பு நான்கு வாரங்களுக்குள் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பிரச்சனை குறித்த தீர்ப்பை வழங்குவதற்கான நேர வரம்பை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதி பெஞ்ச், இந்தப் பிரச்சினையில் போதுமான அளவுக்கு விசாரணை ஏற்படுத்தியாகிவிட்டது, 20 வருடங்களுக்கு மேலாக குழப்பம் நிலவுகிறது இதனை கருத்தில் கொண்டு இன்னும் 4 வாரங்களில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் தெரிவித்துள்ளது. 

காவிரி பிரச்சனை குறித்து கர்நாடகாவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதில் உச்ச நீதிமன்றத் தலையீடு கோரி மனு செய்திருந்தார். மேலும் குடிநீருக்கான உரிமை, வாழ்வாதாரத்துக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு  20 வருடங்களுக்கு பின்  வழங்கப்படுவது அனைத்து தரப்பினரிடையும்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close