உச்ச நீதிமன்ற நீதிபதியாக பெண் வக்கீல் நேரடி தேர்வு!

  SRK   | Last Modified : 12 Jan, 2018 07:43 am


மூத்த வக்கீல் இந்து மல்ஹோத்ராவை, நீதிபதியாக உயர்த்தி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக தேர்வாகும் முதல் பெண் வக்கீல் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட, 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அவரது பெயரை குழு ஒருமனதாக தேர்வு செய்தது. 

உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது 25 நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்றம், இவர்கள் இருவரையும் சேர்த்து 27ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 31 நீதிபதிகள் வரை உச்ச நீதிமன்றத்தில் இயங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close