நிர்வாகம் சரியில்லை: உச்சநீதிமன்ற நீதிபதிகள் புகார்

  முத்துமாரி   | Last Modified : 12 Jan, 2018 12:55 pm


இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இணைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் நீதிபதிகள் கூறுவதாவது, "சமீப காலமாக உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. எனவே முதல் முறையாக நீதிபதிகளாகிய நாங்கள் இணைந்து செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக 4 நீதிபதிகள் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒரு கடிதம் அளித்தோம். இன்று காலையில் கூட இது தொடர்பாக நாங்கள் தலைமை நீதிபதியை சந்தித்தோம். எங்களது குறைகள் அனைத்தையும் நாங்கள் தெரிவித்தோம். ஆனால் அந்த கடிதம் தொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


நீதித்துறையின் கொள்கைகளை சீர்குலைக்கும் வகையில் சில நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நீதிமன்றம் என்பது அரசியல் போல் கிடையாது. இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஜனநாயகம் நிலைகுலைந்து போகும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா எடுக்கும் முடிவுகளால் ஜனநாயகம் சீர்குலைந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. நிர்வாகம் குறித்து தலைமை நீதிபதியிடம் கூறி எந்த பலனும் இல்லை. எனவே இதை நாங்கள் மக்களிடம் தெரியப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தலைமை நீதிபதியை நீக்க முயற்சி எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் இவ்வாறு புகார் அளித்துள்ளது நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த 4 நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகோய் அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close