• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

பேசாமல் இருந்திருந்தால் சுமூகமாக முடித்திருக்கலாம்: அட்டர்னி ஜெனரல்

  SRK   | Last Modified : 12 Jan, 2018 10:08 pm


உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வழக்குகளை நீதிபதிகளுக்கு நியமிப்பதில், தலைமை நீதிபதி விதிமுறைகளை மீறுவதாக, நீதிபதி சேலமேஸ்வர் உட்பட 4 நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். பல முறை இதுபற்றி அவரிடம் பேசியும் பிரயோஜனம் இல்லையென்றும், இன்று காலை கூட பேசியதாகவும் தெரிவித்தனர். வேறுவழியில்லாமல் மக்கள் முன் இந்த விஷயத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், "இந்த பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்திருந்தாலே இந்த விஷயம் சுமூகமான முடிவுக்கு வந்திருக்கும்" என கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close