உச்ச நீதிமன்ற சர்ச்சை: பார் கவுன்சில் குழு சமரச பேச்சு

  SRK   | Last Modified : 14 Jan, 2018 03:48 pm


இரு தினங்களுக்கு முன், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டி, விதிமீறல் செய்வதாக அவர் மீது குற்றம் சாட்டினர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், இந்திய நீதித்துறையின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பியுள்ளதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். 

இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு கொண்டுவர பல்வேறு தரப்பில் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகின்றனர். இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தன்னை எதிர்க்கும் 4 நீதிபதிகளையும் நேரில் சந்தித்து பேசுவார் என கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய பார் கவுன்சில் (வழக்கறிஞர் கூட்டமைப்பு), 7 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்து, இரண்டு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தை உடனடியாக சுமூகமான முடிவுக்கு கொண்டு வர அவர்கள் முயற்சி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நீதிபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த, 7 பேர் கொண்ட குழுவை ஒருமனதாக நியமித்துள்ளோம். 23 நீதிபதிகளை சந்திக்க அனுமதி வாங்கியுள்ளோம். இந்த விவகாரத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ எவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும்" என பார் கவுன்சில் தெரிவித்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close