காதலர்களை பிரிக்க யாருக்கும் உரிமை கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

  முத்துமாரி   | Last Modified : 16 Jan, 2018 02:20 pm


சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை கேள்வி கேட்கவோ, பிரிக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. 

வடமாநிலத்தில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதன்படி, சாதி மாறி திருமணம் செய்பவர்களை கட்டப்பஞ்சாயத்து மூலம் தாக்குவது, பிரித்துவைப்பது போன்றவை நடைபெறுகின்றன. இதை தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. விசாரணையில் நீதிபதிகள் கூறியதாவது, "சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பிரிக்க முயற்சி செய்வது சட்ட விரோதமானது. சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளை கட்டப் பஞ்சாயத்து அல்லது கிராமப் பஞ்சாயத்து மூலமாகவோ, சமுதாயப் பெரியவர்கள் மூலமாகவோ பிரிக்க முயற்சி செய்யக்கூடாது. அதற்கு  யாருக்கும் உரிமை கிடையாது. மத்திய அரசு இது போன்ற பிரச்னைகளை தடுக்கவில்லை எனில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்" என கூறி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close