தலைமை நீதிபதியின் மீது புகார்; விசாரணை நடத்த கோரிக்கை

  SRK   | Last Modified : 16 Jan, 2018 10:38 pm


இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மீது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் விதிமீறல்கள் புகார் அளித்துள்ளார். இது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட குழு தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதில், பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை நீதிபதியின் செயல்கள் குறித்து கேள்வி எழுப்பிய 4 நீதிபதிகளும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஒடிஷா பிரசாத் கல்லூரி வழக்கு விசாரணையின் போது, அதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறிய பிரஷாந்த் பூஷன், அந்த வழக்கில் இருந்து அவர் விலகியிருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி செலமேஸ்வர், இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி மிஸ்ரா அல்லாத 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சை நியமித்தார். ஆனால், தானும் இருக்கும் ஒரு பெஞ்ச் அந்த வழக்கை விசாரிக்குமாறு, தலைமை நீதிபதி உடனே புதிய உத்தரவை பிறப்பித்தார். மற்ற நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையே விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரஷாந்த் பூஷனுக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையே அன்று பெரிய வாக்குவாதமே நடந்தது. இந்த சம்பவங்களை தொடர்ந்து, தலைமை நீதிபதிக்கு எதிராக நீதிபதி செலமேஸ்வர் உட்பட 4 மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பை அழைத்து, அதில் தலைமை நீதிபதி விதிமீறலில் ஈடுபட்டு வருவதாக எச்சரித்தனர்.

தற்போது, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், தலைமை நீதிபதியின் மீது புகார் அளித்துள்ளார். விதிமீறல், உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அவர், இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தலைமை நீதிபதியை எதிர்த்த, நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் மற்றும் நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோரை நியமிக்க வலியுறுத்தியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close