4 நீதிபதிகளை சந்திக்கிறார் தலைமை நீதிபதி

  SRK   | Last Modified : 18 Jan, 2018 07:36 am


இந்திய தலைமை நீதிபதிக்கு எதிராக பேட்டியளித்த 4 உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளை அவர் நேரில் சந்தித்து பேசி வந்தார். நேற்று நடக்கவேண்டிய சந்திப்பு, நீதிபதி செலமேஸ்வர் நீதிமன்றத்துக்கு வராததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அந்த சந்திப்பு நடக்கும் எனக் கூறப்படுகிறது. 

வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பிரித்துக் கொடுப்பதில் தலைமை நீதிபதி விதிமீறலில் ஈடுபடுவதாகவும், இதனால் நாட்டின் ஜனநாயகத்துக்கு பெரிய ஆபத்து என்றும் எச்சரித்து, நீதிபதி செலமேஸ்வர் உட்பட 4 நீதிபதிகள் பத்திரிக்கையாளர்ளை சந்தித்து தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், செவ்வாய் கிழமை அன்று தலைமை நீதிபதி, நால்வரையும் சந்தித்து சமாதான முயற்சியில் ஈடுபட்டார். முன்னதாக நீதிபதி லோயா மரணமடைந்த வழக்கு போன்ற முக்கியமான வழக்குகளின் விசாரணையை மூத்த நீதிபதிகளுக்கு தராமல் உச்ச நீதிமன்ற இளைய நீதிபதிகளுக்கு கொடுத்ததாக 4 நீதிபதிகளும் கூறியிருந்தனர்.

சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர், அந்த வழக்கில் இருந்து, நீதிபதி அருண் மிஷ்ரா விலகிக் கொண்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close