"ஆதாரை வைத்து எதிர்கட்சிகளை குறிவைக்கலாம்": உச்ச நீதிமன்ற விசாரணை

  SRK   | Last Modified : 18 Jan, 2018 09:16 am


ஆதார் அடையாள அட்டைக்கு எதிரான வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. ஏற்கனவே, தனி நபர் சுதந்திரம் என்பது ஒரு இந்தியனின் அடிப்படை உரிமை என கடந்த வருடம் 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்திருந்த நிலையில், இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆதார் அடையாள அட்டை, தனி நபர் சுதந்திரத்தை சீர்குலைப்பதாகவும், அதில் பொதுமக்களின் கைரேகை போன்ற தனி அடையாளங்களை போதிய பாதுகாப்பில்லாமல் அரசு சேகரித்து வைத்துள்ளதாகவும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நியமிக்கப்பட்டது. 

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவும், ஆதார் விவரங்களை மத்திய அரசு நிர்வகித்து வருவதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர். அரசை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சிகள் போன்றோரை குறிவைத்து தண்டிக்க ஆதிரை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்றும் வாதிட்டனர். மேலும், சமீபத்திய ஹேக்கிங் சம்பவங்களை பார்க்கும்போது, ஆதார் விவரங்களை பாதுகாக்காமல், அதில் மொபைல் எண் போன்றவற்றை இணைக்க வலியுறுத்துவதை எதிர்த்தும் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன. 

நாடாளுமன்றம் இந்த ஆதார் சட்டத்தை, பண மசோதாவாக நிறைவேற்றியதற்கும் மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், "நாடாளுமன்ற சபாநாயகரின் முடிவுகளின் மீது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பக் கூடாது" என தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இன்றும் வழக்கின் விசாரணை தொடரும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close