நாப்கின் ஜிஎஸ்டி விவகாரம்: வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கும்!

  முத்துமாரி   | Last Modified : 22 Jan, 2018 01:17 pm


நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு குறித்த வழக்குகளை பல்வேறு நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. 

சானிட்டரி நாப்கின்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான பெண்கள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அமைச்சருக்கு நாப்கின் அனுப்பி வைப்பதுபோன்ற செயல்கள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார், 'ராணுவ வெடிகுண்டுகள் தயாரிப்பதை விட்டுவிட்டு அந்த பணத்தில் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கலாம்' என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு குறித்த வழக்குகளை பல்வேறு நீதிமன்றங்கள் விசாரிக்க தடை விதித்துள்ளது. இதன்பின்னர் இது தொடர்பான அனைத்து  வழக்குகளையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close