ராஜிவ் காந்தி கொலை வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

  முத்துமாரி   | Last Modified : 23 Jan, 2018 11:35 am


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரும் விவகாரத்தில் மத்திய அரசு 3 மாத காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் தண்டனை பெற்று வருகின்றனர். முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு பின்னர் சலுகையில் அடிப்படையில், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இவர்கள் வேலூர் சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். இதனால் இவர்களை விடுதலை செய்யும் நோக்கில் தமிழக அரசு முயற்சித்தது. 

ஆனால் குற்றவாளிகளை விடுவிக்கக்கூடாது என மத்திய அரசு, தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. மத்திய அரசு சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து 3 மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close