பத்மாவத் படத்துக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 23 Jan, 2018 11:52 am


'பத்மாவத்' படத்துக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தீபிகா படுகோன் நடிப்பில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவத்' படத்தில் ராஜ்புட் இன மக்களை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக வடமாநிலங்களில் போராட்டங்கள் வலுத்தன. மேலும், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் படம் வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை கடந்த 18ம் தேதி விசாரித்தது. விசாரணை முடிவில் 4 மாநிலங்களில் படத்தின் மீது விதித்த தடையை நீக்கி நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். 

இதனையடுத்து 4 மாநில அரசுகளும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றதில், பத்மாவத் படத்திற்கு தடையில்லை எனக்கூறி மீண்டும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் அறிவிக்கப்பட்டது போல் படம் வருகிற 25ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close