3வது வழக்கிலும் லாலு குற்றவாளி! 5 ஆண்டு சிறை

  முத்துமாரி   | Last Modified : 24 Jan, 2018 02:43 pm


மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த சமயத்தில் கால்நடை தீவனம் வாங்கியதாக அரசு பணத்தில் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது புகார் கூறப்பட்டு அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டு வழக்குகளிலும் முறையே 5 ஆண்டுகள், 3.5 ஆண்டுகள்  சிறைத்தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ் தற்போது பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து சாய்பாசா மாவட்டத்தில் அரசு கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடி பணம் எடுத்து மோசடி செய்த வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாட்டுத்தீவன வழக்கில் 3வது முறையாக லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ராவும் குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் லாலுவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close