டெல்லியில் இப்போது இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்

  முத்துமாரி   | Last Modified : 25 Jan, 2018 09:52 am


டெல்லியில் இப்போதைக்கு இடைத்தேர்தல் எதுவும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. 

இரட்டை பதவி வகித்ததாக கூறி, டெல்லியில் ஆம் ஆத்மீ எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக 20 எம்.எல்.ஏக்களும் இணைந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் நீதிமன்றம், தகுதி நீக்கத்தை தொடர்ந்து உடனடியாக டெல்லியில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது, முழு விசாரணைக்கு பிறகே எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும் நீதிமன்ற உத்தரவை ஏற்று, இப்போதைக்கு டெல்லியில் இடைத்தேர்தல் எதுவும் நடத்தப்படாது என உறுதி அளித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close