கர்னி சேனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 29ம் தேதி விசாரணை

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 25 Jan, 2018 06:23 pm

பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கர்னி சேனா அமைப்பின் நிர்வாகிகள் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பத்மாவத் படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று கர்னி சேனா என்ற அமைப்பு போராடி வருகிறது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றுப் படத்தை வெளியிட்டனர். இதனால், வட மாநிலங்களில் பல இடங்களில் கர்னி சேனா போராட்டத்தில் குதித்துள்ளது. 

இந்தச் சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஶ்ரீ ராஜ்புத் கர்னி சேனா நிறுவனர் லோகேந்தர் சிங் கால்வி, தேசிய தலைவர் சூரஜ் பால் மற்றும் உறுப்பினர் கரம் சிங் ஆகியோருக்கு எதிராக மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை வருகிற திங்கட்கிழமை நடைபெறும் என்று தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு தெரிவித்துள்ளது. அதேபோல் மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்குச் செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close