அலகாபாத் நீதிபதியை நீக்க முடிவு செய்தார் இந்திய தலைமை நீதிபதி

  SRK   | Last Modified : 01 Feb, 2018 03:01 pm


மருத்துவ கல்லூரி வழக்கு விசாரணையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷுக்லா விதிமீறல் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவரை நீக்க முடிவு செய்துள்ளார். 

உச்சநீதிமன்ற தடை உத்தரவை மீறி, தனியார் மருத்துவ கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு தன்னிச்சையாக நீதிபதி ஷுக்லா அனுமதித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியதால், நீதிபதி ஷுக்லா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி பி.கே.ஜெயிஸ்வால் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. 

இந்த குழு நடத்திய உச்சகட்ட விசாரணையின் முடிவில், ஷுக்லா விதிமீறியுள்ளதாக தெரிய வந்துள்ளதால், அவரை ராஜினாமா செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தினார். ஆனால், ஷுக்லா அதற்கு இணங்காததால், அவரை நீக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதன்படி, நாடாளுமன்ற மாநிலங்களவை இந்த விவகாரத்தை எடுத்து விசாரித்து, நீதிபதி ஷுக்லாவை நீக்குவது பற்றி ஓட்டளித்து முடிவெடுக்கும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close