உச்ச நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்

  SRK   | Last Modified : 01 Feb, 2018 10:21 pm


உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் குழு, இன்று இரண்டு புதிய நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும், மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

கடந்த மாதம் 10ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு சந்தித்த போது, இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. இன்று உச்ச நீதிமன்ற இணையதளத்தில் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

31 நீதிபதிகள் வரை பணியாற்ற உச்ச நீதிமன்றத்தில் இடமுள்ள நிலையில், தற்போது 25 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். "இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளை தீர ஆய்வு செய்த பிறகு, சீனியாரிட்டி பிரகாரம், 45வது இடத்தில் உள்ள நீதிபதி கே.எம்.ஜோசப்பை தேர்ந்தெடுத்துள்ளோம். கேரளா உயர் நீதிமன்றத்தில் இருந்து வரும் இவர் தற்போது உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் உச்ச நீதிமன்ற பதவிக்கு மிகவும் தகுதியானவரும் பொருத்தமானவரும் ஆவார். 

அதேபோல, இந்திய பார் கூட்டமைப்பின் உறுப்பினர்களை ஆய்வு செய்து மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்துள்ளோம். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இவர் மிகவும் தகுதி வாய்ந்தவராவார்" என்று உச்ச நீதிமன்ற அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. 

உச்ச நீதிமன்ற வரலாற்றில், நேரடியாக நீதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆவார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close