தலைமை நீதிபதியின் அதிரடி முடிவு; சர்ச்சைக்கு முடிவு வருமா?

  SRK   | Last Modified : 02 Feb, 2018 11:56 am


இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நேற்று நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை பொதுமக்கள் பார்க்கும்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார்.

இந்த முடிவு, சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சையில் இருந்து மீண்டுவர உச்சநீதிமன்றத்துக்கு உதவும் என பலர் தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவின் மீது சிலர் சந்தேகமும் எழுப்பியுள்ளனர். 


முக்கியமாக பொதுநல வழக்குகளை தன்வசம் வைத்துக்கொண்டதால், தலைமை நீதிபதியின் இந்த நடவடிக்கை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என சிலர் விமர்சனங்கள் முன்வைக்கின்றனர். 

சில வாரங்களுக்கு முன், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர், பத்திரிகையாளர் சந்திப்பை அழைத்து, தலைமை நீதிபதி வழக்குகளை பிரித்துக் கொடுப்பதில், விதிமீறல் செய்வதாக பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர், தலைமை நீதிபதி மிஸ்ரா சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close