கௌரவக் கொலைக்கு 3வது நபர் தலையிடுவதே காரணம்: உச்சநீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 05 Feb, 2018 01:36 pm


இந்தியாவில்  நடைபெறும் கௌரவக் கொலைகளுக்கு தம்பதிகளுக்கு இடையே மூன்றாவது நபர் தலையிடுவதே காரணம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

சக்தி வாஹினி என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனத்தின் மனுவில், "இந்தியாவில் கட்டப்பஞ்சாயத்துக்கள், ஊர் பெரியவர்கள் மூலமாக தம்பதிகள் பிரித்து வைக்கப்படுகிறார்கள். முக்கியமாக சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களை இது வெகுவாக பாதிக்கிறது. எனவே இந்த மாதிரியான கட்டப்பஞ்சாயத்துக்கள் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த பகுதிகளில் நிகழ்கின்றன என விசாரித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், "கட்டப்பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்ட விரோதமானது. பெரும்பாலும் தம்பதிகளிடையே 3வது நபர் தலையிடுவதே கௌரவக் கொலைகளுக்கு காரணமாக அமைகிறது. கணவன்-மனைவியை பிரிக்க எந்த நபருக்கும் அதிகாரம் கிடையாது" என கருத்து தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close