வருமானத்துக்கான ஆதாரத்தைக் காட்டினால்தான் தேர்தலில் போட்டி! உச்ச நீதிமன்றம் அதிரடி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 16 Feb, 2018 12:49 pm

தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் வருமானத்துக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. 

இன்றைக்குப் பலரும் பணம் சம்பாதிக்கும் விஷயமாக அரசியலைப் பார்க்கின்றனர். முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிடும்போது பலரும் மிகக் குறைவான சொத்து மதிப்பையே கணக்காகக் காட்டுகின்றனர். எம்.எல்.ஏ, எம்.பி ஆன பிறகு அடுத்தத் தேர்தலின்போது அவர்கள் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. எப்படி உயர்ந்தது என்பதற்கு எந்த விளக்கமும் அளிப்பதில்லை. 

இந்தநிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் வருமானத்துக்கான ஆதாரத்தைக் காட்ட உத்தரவிடக் கோரி தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.செல்லமேஷ்வர், "தேர்தலில் போட்டியிடுபவர் தன்னுடைய வருவாய்க்கான ஆதாரத்தைக் காட்டுவதுடன், தன்னுடைய மனைவி, குழந்தைகள், தன்னைச் சார்ந்தவர்களின் வருவாய் ஆதாரத்தையும் காட்ட வேண்டும். தங்கள் வேட்பு மனுவுடன் இந்தத் தகவலை அவர்கள் அளிக்க வேண்டும்" என்று வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை அளித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close