மும்பை சிறையில் பீட்டர் முகர்ஜியிடம் இன்று விசாரணை

  PADMA PRIYA   | Last Modified : 06 Mar, 2018 09:21 am

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக அதன் நிர்வாகி பீட்டர் முகர்ஜியிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்துகிறது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், வெளிநாட்டில் இருந்து முதலீடு பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்த முதலீடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில், சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக, சமீபத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் நிறுவன தலைவர் பீட்டர் முகர்ஜியிடம் அமலாக்கத் துறையினர் இன்று விசாரணை நடத்துகின்றனர்.

ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் பீட்டர் முகர்ஜி அடைக்கப்பட்டுள்ளார். 

மேலும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நிதி அமைச்சக அதிகாரிகளுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close