ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் - ஆடிட்டரிடம் நேருக்கு நேர் விசாரணை

  PADMA PRIYA   | Last Modified : 11 Mar, 2018 04:32 pm

திகார் சிறையில் விராணை கைதியாக வைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தையும், அவரது ஆடிட்டர் பாஸ்கரனையும் நேருக்கு நேர் வைத்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

திகார் சிறையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் காவல் 3 நாட்களுக்கு நீட்டிக்கபட்ட நிலையில், இன்று கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டரையும் நேருக்கு நேர் வைத்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது.  

மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியாவின் கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதில் சுமார் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகாத கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது. 

அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் சென்னையில் உள்ள ஏ.எஸ்.எல். சி.பி.எல் நிறுவனத்துக்கு பணம் கொடுத்ததாக சி.பி.ஐ. தெரிவித்தது.

கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கர ராமன் மூலம் ஏ.எஸ்.சி பி.எல். நிறுவனத்தை நடத்துவதை சி.பி.ஐ. கண்டறிந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் இதை தெரிவித்ததாக சி.பி.ஐ. கூறி இருந்தது. இந்த ஆவணங்களை வைத்து கார்த்தி சிதம்பரத்திடமும், பாஸ்கர ராமனிடமும் ஒன்றாக விசாரணை செய்த வருகின்றனர். 

ஆடிட்டர் பாஸ்கர ராமனை இந்த வழக்கில் கடந்த மாதமே அமலாக்கத்துறை கைது செய்து இருந்தனர். கார்த்தியின் மீதும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் அமலாக்கத் துறையின் வழக்கில் கைது நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close