பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ

  PADMA PRIYA   | Last Modified : 13 Mar, 2018 11:46 am


ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் தான் நிரபராதி என தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சி.பி.ஐ.  உச்ச நீதிமன்றத்தில் பிரமாண மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 1999ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், தான் நிரபராதி என்றும், நீதிமன்றம் அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சி.பி.ஐ.யின் பதிலை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ.யின் பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு பிரமாண மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், ''ராஜீவ் காந்தி கொலைச்சதியில் பேரறிவாளனின் பங்கு,   நீதிமன்றத்தால் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே, அவரது மனு முகாந்திரம் இல்லாதது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close