இஷ்ரத் ஜஹான் போலி என்கவுடர்: மோடியிடம் ரகசிய விசாரணை நடந்தது - முன்னாள் டிஐஜி தகவல்

  PADMA PRIYA   | Last Modified : 14 Mar, 2018 12:05 pm

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோதே, இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் அவரிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டதாக அம்மாநில முன்னாள் டிஐஜி வன்ஸாரா கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கின் மீதான குற்றப்பத்திரிகை அனைத்தும் சிபிஐ-யால் புனையப்பட்டவை எனவும் அவர் கூறியுள்ளார். 

குஜராத் மாநில முதல்வராகப் பிரதமர் நரேந்திர மோடி இருந்த காலகட்டத்தில், 2004-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த இளம்பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், மோடியை கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இது போலி என்கவுன்டர் என்று தெரியவந்தது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அப்போதைய அம்மாநில டிஜிபி வன்ஸாரா, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பாண்டே உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், வன்ஸாரா தன்னை இதிலிருந்து விடுவித்து விடுமாறு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், இஷ்ரத் ஜஹான் வழக்கில் அப்போதைய முதல்வர் மோடியை அதிகாரிகள் ரகசியமாக விசாரித்தனர். 

ஆனால் எந்த உறுதியான தகவல்களோ விவரங்களோ இல்லை. மாறாகத் தவறான தகவல்களே இருந்தன. இதிலிருந்தே அவை அனைத்தும் புனையப்பட்ட வழக்கு எனத்தெரிய வருகிறது" எனவே தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close