ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் மனு தள்ளுபடி!

  முத்துமாரி   | Last Modified : 14 Mar, 2018 04:12 pm


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தொடர்ந்த இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். அதன்படி, "தான் அளித்த வாக்குமூலத்தை சிபிஐ அதிகாரிகள் மாற்றியுள்ளனர். தான் ஒரு நிரபராதி. எனவே எனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெற வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த மனு இன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞாிடம்  பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்துக் காட்டி, 'ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடா்பில்லை என்பதை எப்படி ஏற்க முடியும்?' என்று கேள்வி எழுப்பினர். மேலும்,  '25 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய தீர்ப்பை இப்போது மாற்ற வேண்டுமா? பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்து பாா்த்தால் அவர் குற்றவாளி என்பது உறுதியாகிறது' என்று கூறி பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close