ஐ.பி.எல்-க்காக தண்ணீர் வீணாக்கபடுகிறதா? - பதில் அளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

  PADMA PRIYA   | Last Modified : 15 Mar, 2018 11:44 am

ஐ.பி.எல் போட்டிக்காகத் தண்ணீர் வீணாக்கப்படுவது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகமும் இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவர் ஓர் மனு தாக்கலை செய்துள்ளார். அதில், "11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 7-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 9 மாநிலங்களில், 51 இடங்களில் 60 ஆட்டங்கள் இந்தப் போட்டியில் நடக்கிறது. 

இதையொட்டி மைதானம் பராமரிப்பு, பிட்ச் தயாரிப்பு உள்படப் பல்வேறு சீரமைப்பு பணிகளுக்காகப் பல லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தும் போது, தேவையில்லாமல் தண்ணீர் வீணாவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் குறையும். இதனால் தண்ணீர் தட்டுப்பாடுப் பிரச்சினையும் உருவாகும். முற்றிலும் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் இந்தப் போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு மீதான விசாரணையை நடத்திய பசுமை தீர்ப்பாயப் பெஞ்ச், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் போட்டியை நடத்தும் 9 மாநிலங்கள் ஆகியவை 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close