கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின்: டெல்லி உயர்நீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 23 Mar, 2018 03:14 pm


ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மத்திய முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி 29ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிபிஐ விசாரணையில் இருந்த அவர் நீதிமன்ற காவலில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நீதிமன்றக்காவல் நாளை முடிவைடைய உள்ளது. 

இதற்கிடையே ஜாமின் வழங்கக்கோரி கார்த்தி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இன்றைய விசாரணையில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 10 லட்சம் ரூபாய் பிணைத்தொகையாக அளிக்கவும், கார்த்தியின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close