கணவன்-மனைவி இடையே கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 27 Mar, 2018 11:22 am


கணவன்-மனைவி இடையே 3வது நபர் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்தியாவில் வடமாநிலங்களில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கட்டப்பஞ்சாயத்துக்கள் மூலமாக புதுமண தம்பதிகள் பிரித்து வைக்கப்படுகின்றனர், என சக்தி வாஹினி என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆணவக்கொலை மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம், 'கணவன் - மனைவி இடையே 3வது நபர் தலையிடக்கூடாது' என்ற அறிவுறுத்தலை வழங்கியிருந்தது. இன்று இந்த வழக்கின் விசாரணையின் போது, 'கணவன் - மனைவி இடையே 3வது நபர் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்' என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும், "கட்டப்பஞ்சாயத்தினால் தான் ஆணவக்கொலைகள் அதிகமாக நடந்தேறுகின்றன. ஆணவக்கொலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை வேண்டும். ஏனென்றால் அந்தந்த மாநில நடைமுறைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்" என தெரிவித்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close