காவிரி: 3 மாத காலம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனு ஏற்பு

  முத்துமாரி   | Last Modified : 03 Apr, 2018 11:01 am


காவிரியின் தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் கால அவகாசம் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழக அரசின் மனுவுடன் சேர்த்து வருகிற ஏப்ரல் 9ம் தேதி விசாரிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்தாதை கண்டித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. வருகிற ஏப்ரல் 9ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 

இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த 6 வார காலம் என்பது போதுமானதாக இல்லை. காவிரி செயல் திட்டத்தை கொண்டு வர மேலும் 3 மாத காலம் அவகாசம் வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் இன்று உச்சநீதிமன்றம் மத்திய அரசின் மனுவை ஏற்றுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தமிழக அரசின் மனுவுடன் மத்திய அரசின் இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close