செயல்பாடு தான் முக்கியம், 'காவிரி வாரியம்' பெயரல்ல: மத்திய அரசு கூறுகிறது

  Padmapriya   | Last Modified : 10 Apr, 2018 06:57 pm

காவிரி மேலாண்மை வாரியம் அல்லது வேறு எந்தப் பெயரோ, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், அமைப்பின் பெயரில் எதுவும் இல்லை அதன் செயல்பாடுகளே முக்கியம் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கூறியுள்ளார். 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், "காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை தங்கள் மாநிலங்களின் நலனை முன்னிட்டு தான் ஒவ்வொருவரும் அணுகுகின்றனர். ஆனால், காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் அனைவருக்கும் பயனளிப்பதையே மத்திய அரசு செய்ய நினைக்கிறது. அதைக் கூட்டாட்சி அடிப்படையிலேயே மத்திய அரசு அணுகுகிறது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். தீர்ப்பை அமல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தைத் தயாரித்து அளிக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அல்லது வேறு எந்தப் பெயரோ, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என அழைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அமைப்பின் பெயரில் எதுவும் இல்லை. அதன் செயல்பாடுதான் முக்கியம்" எனக் கூறினார். 

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஒரு வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மத்திய அரசு மீதான தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஒரு வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்யவு கெடு விதித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close