காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் கெடு

  Padmapriya   | Last Modified : 13 Apr, 2018 06:30 pm

காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை இறுதிக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக கர்நாடக மாநில அரசு மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. அதில், கர்நாடகாவில் இருந்து வரும் காவிரியில் கழிவுநீர் கலப்பதாகவும், அந்த நீரை தமிழகத்திற்கு வழங்குவதாகவும் கூறப்பட்டிருந்தது. இது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்தது. அப்போது, காவிரியில் மாசு கலப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மே இறுதி வரை ஆய்வு செய்து ஜூலைக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close