பாலியல் வன்கொடுமை சட்டம்: டெல்லி உயர்நீதிமன்றம் பாய்ச்சல்!

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2018 10:28 pm


மத்திய அரசு புதிதாக சிறுமியர் பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றம் எந்த அடிப்படையில் வரையப்பட்டது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சமீபத்தில் உ.பி மற்றும் காஷ்மீரில் நடந்த சம்பவங்களை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க நாடு முழுவதும் இருந்து குரல்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற புதிய சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். 

இந்நிலையில், இந்த சட்டத் திருத்தம் சரியானது தானா, என்ற கேள்விகளை பல சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், எந்த அடிப்படையில் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது, என கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை விவாகரத்துக்கு பிறகு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை பலர் தவறாக பயன்படுத்தி வருவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த போது, நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரி ஷங்கர் ஆகியோர் கொண்ட பெஞ்ச் கூறியதாவது, "இந்த புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னால், என்ன ஆய்வு நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசினார்களா? இல்லை பொதுமக்கள் கொந்தளித்த ஒரே காரணத்தால் இது நிறைவேற்றப்பட்டதா?

கொலைக்கும், பாலியல் வன்கொடுமைக்கு ஒரே தண்டனை என்றால் அதன் விளைவுகள் மிகப்பெரியது. எத்தனை குற்றவாளிகள் இதனால், வன்கொடுமை செய்துவிட்டு, கொலை செய்ய துணிவார்கள் என யோசித்து பாருங்கள்.

மேலும், பெரும்பாலான வன்கொடுமை குற்றவாளிகள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள். அதை கணக்கில் எடுத்துக் கொண்டார்களா? இதுபோன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க  ஏதாவது திட்டங்கள் உள்ளதா? பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது நலத்திட்டங்கள் உண்டா? பல வழக்குகளில் சிறுமிகளை வன்கொடுமை செய்பவர்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார்கள். இந்த சட்டத்தால், அந்த குடும்பமே சேர்ந்து உண்மையை மறைக்க நிறைய வாய்ப்புள்ளது"  என்பது உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதிகள்  கேட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close