வலுக்கும் உச்ச நீதிமன்ற சர்ச்சை; நிராகரிக்கப்படுகிறாரா நீதிபதி ஜோசப்?

  SRK   | Last Modified : 26 Apr, 2018 05:16 pm


உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான பரிந்துரையில் ஒரு நீதிபதியை திரும்பப்பெற மத்திய அரசு வலியுறுத்திய நிலையில், வழக்கறிகஞர்கள் கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் அறிவுரையை ஏற்று, குறிப்பிட்ட நீதிபதி மறுபரிசீலனை செய்வார் என உச்ச நீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் தேர்வுக்குழு) தெரிவித்துள்ளது. 

3 மாதங்களுக்கு முன்னர், உச்ச நீதிமன்ற கொலீஜியம், இந்து மல்ஹோத்ரா, மற்றும் கே.எம் ஜோசப் ஆகியோரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்தது. இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு எழுதிய கடிதத்தில், இந்து மல்ஹோத்ராவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாகவும், கே.எம். ஜோசப்பின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமரும், கே.எம்.ஜோசப்பின் பதவி உயர்வை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன், மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு, சட்டத்துறையில் தேவையில்லாமல் தலையிடுவதாகவும், தங்களுக்கு வேண்டிய ஒரு நீதிபதியை மட்டும், ஏற்றுக் கொள்வது, மோசமான விளைவுகளை கொண்டு வரும் எனவும் கோரினர். இதனால், இரண்டு நீதிபதிகளின் பரிந்துரையையும் கொலீஜியம் பின்வாங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம், இந்த கோரிக்கையை நிராகரித்தது. மத்திய அரசின் அறிவுரையை ஏற்று, கே.எம். ஜோசப்பை மட்டும் மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையிலான சர்ச்சை, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் பரிந்துரை மறுபரிசீலனை செய்யப்படுவது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close