உச்சநீதிமன்றத்தில் கார்த்தி கேவியட் மனு தாக்கல்

  முத்துமாரி   | Last Modified : 10 Mar, 2018 12:36 pm


கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தன்னை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தால், அதில் தன்னுடைய கருத்தை கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. ஏற்கனவே 3 முறை சிபிஐ காவல் வழங்கிய நிலையில் மேலும் 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் நேற்று(மார்ச் 9) உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத்தடை விதித்துள்ளது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தால் தன்னிடம் கருத்து கேட்க வேண்டும்' என கூறி மனுதாக்கல் செய்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close