ஆருஷி கொலை: தல்வார் தம்பதியினருக்கு எதிரான மேல்முறையீட்டு மனு ஏற்பு

  முத்துமாரி   | Last Modified : 19 Mar, 2018 04:54 pm


ஆருஷி கொலை வழக்கில் அவரது பெற்றோர்களான தல்வார் தம்பதியினருக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. 

உத்தரபிரதேசம் நொய்டா பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் ஆருஷி என்ற 14 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது வீட்டு பணியாள் ஹேம்ராஜ் குற்றவாளியாக இருப்பார் என போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட நிலையில் ஆருஷி இறந்த மறுநாளே ஹேம்ராஜும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.


இதைத்தொடர்ந்து, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு சந்தேகத்தின் பேரில் ஆருஷியின் பெற்றோரான தல்வார் தம்பதியினர் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை இறுதியில், கொலை செய்த ஆதாரத்தை அழித்ததாக கூறி தல்வார் தம்பதியினர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 2013ல் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


பின்னர் தல்வார் தம்பதியினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கை மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2017 அக்டோபர் மாதம் ஆருஷியின் பெற்றோர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்த நிலையில் தற்போது அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது. கொலை செய்யப்பட்ட ஹேம்ராஜின் மனைவியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகக் கூறி, தல்வார் தம்பதியினருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close