2ஜி தீர்ப்பை எதிர்த்து சிபிஐ-யும் மேல்முறையீடு

  முத்துமாரி   | Last Modified : 20 Mar, 2018 03:14 pm


2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறையைத் தொடர்ந்து சிபிஐ-யும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. 

2ஜி அலைக்கற்றை மோசடி வழக்கில் கடந்த டிசம்பர் 21ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். 

2ஜி வழக்கின் இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று(மார்ச். 19) மேல்முறையீடு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐயும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் என கூறப்பட்ட நிலையில் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ இதற்கான மேல்முறையீடு மனுவை அளித்துள்ளது. விரைவில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வர உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close