லோக் ஆயுக்தா அமைக்க தாமதம் ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி

  முத்துமாரி   | Last Modified : 23 Mar, 2018 11:32 am


லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் குறித்து விசாரிப்பதற்கான ஒரு தனி நீதிமன்றம் அமைக்க கோரிய உச்சநீதிமன்ற வழக்கில், தமிழகம் உள்பட 12 மாநிலங்களும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைக்க தாமதம் ஏன்? என நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், "காரணம் எதுவும் இல்லாமல் மாநில தலைமை செயலர்கள் இவ்வாறு தாமதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. 

அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைக்க தாமதிப்பதற்கான காரணத்தை பிரமாண பத்திரம் மூலமாக தாக்கல் செய்ய வேண்டும். எந்த காரணமும் சொல்லாமல் 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close