ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது: டெல்லி உயர்நீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 23 Mar, 2018 02:47 pm


ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்ததாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 20 பேர்  இரட்டை பதவி வகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவரிடம் பரிந்துரைத்தது. அதனை குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொண்டார். 

இது தொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 20 பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் இன்றைய விசாரணையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது எனவும் மீண்டும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close