கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

  முத்துமாரி   | Last Modified : 02 Apr, 2018 03:52 pm


ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வரும் 27ம் தேதி வரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ விசாரணை நடைபெற்று வந்தது. ஐ.என்.எக்ஸ் மீடியா உரிமையாளர்களான பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி கார்த்தி சிதம்பரம்  இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணை முடிந்த நிலையில், கார்த்தி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கார்த்திக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும், உச்சநீதிமன்றமும் கார்த்தியை கைது செய்ய இடைக்காலத்தடை விதித்தது. இன்று அதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், கார்த்தி கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 27ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close