எல்லா பிரச்னைகளுக்கும் ‘ஆதார்’ தீர்வு ஆகாது: உச்ச நீதிமன்றம்

  Sujatha   | Last Modified : 06 Apr, 2018 06:27 am


வங்கி மோசடிகள் உள்ளிட்ட எல்லா பிரச்னைகளுக்கும் ‘ஆதார்’ தீர்வாக அமையாது  என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அனைத்து ஆவணகளுடனும் ஆதார் இணைப்பு அவசியம் என்ற மத்தியின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நேற்று வியாழக்கிழமை  பல்வேறு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.     

அப்போது நீதிபதிகள், “எல்லா பிரச்னைகளுக்கும் ஆதார் தீர்வாக அமையாது. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி மோசடிகள், வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மோசடியாளர்களால் நடத்தப்பட்டு உள்ளன. அப்படி இருக்கும்போது ஆதார் எப்படி பாதுகாப்பானது? யாருக்கு கடன் கொடுக்கிறோம் என்பதை வங்கியாளர்கள் அறிந்து இருக்கிறார்கள். வங்கி அதிகாரிகள், மோசடியாளர்களுடன் கூட்டுச்சதி செய்து செயல்பட்டு உள்ளனர். இதையெல்லாம் தடுத்து நிறுத்த ஆதார் சிறிய அளவில்தான் செயல்பட முடியும்” என கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக, மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.கோபால் ஆஜராகினர் அப்போது அவர் கூறியது, “சேகரிப்பு மையங்களில் இருந்து ஆதார் தகவல்கள் எந்த விதத்திலும் கசிந்து விடாதபடிக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஆதார் மூலம்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிற விளிம்பு நிலை மக்களுக்கு உணவு தானியங்களும், வீடுகளும், வேலை வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன; தனி நபர் உரிமை மிகக்குறைந்த அளவுக்கே பாதிக்கத்தக்க அளவில் அரசு எச்சரிக்கையாக செயல்பட்டு உள்ளது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close