மருத்துவ மேற்படிப்பில் 50% உள் இடஒதுக்கீடு இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2018 12:21 pm


மருத்துவ மேற்படிப்பில் 50% உள் இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில அரசின் கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ மேற்படிப்புக்கு 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தன. ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்த புதிய விதிமுறைகளின் படி, இந்த 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. 

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு விதிகளின்படி இனி 50% இட ஒதுக்கீடு கிடையாது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் தான் பொருந்தும் என கூறி 50% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக கடந்த ஏப்ரல் 17ம் தேதி தீர்ப்பளித்தது.  

இதனை எதிர்த்து மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் மேற்படிப்பில் சேர அளிக்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு தொடர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மருத்துவ மேற்படிப்பில் 50% உள் இடஒதுக்கீடு இல்லை என தெரிவித்தது. இந்தாண்டு மட்டும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close