காவிரி விவகாரத்தில் 2 வார கால அவகாசம் கோரிய மத்திய அரசின் மனு வாபஸ்

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2018 10:30 pm


காவிரி விவகாரத்தில், மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்ய 2 வார காலம் கோரிய மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், அந்த கேடு முடியும் போது, தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கீம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடுத்தது. 

அதன்பின், மே மாதம் 3ம் தேதிக்குள் நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின் வரைவை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கெடு நெருங்கி வரும் நிலையில், மேலும் 2 வாரம் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. தற்போது அந்த மனுவை திரும்பப்பெற்றுள்ளது. மத்திய தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் இந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close